Friday, 12 February 2016

13-2-2016 AIADMK

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்திட்டத்திற்கான பயனாளிகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவியின் பெயர் அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயர் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற வேண்டும். பயனாளி நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளியாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கிராமப் பஞ்சாயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளி அக்குடும்பத்தில் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சேலம் மாவட்டம் கொம்பாடிபட்டி காலனியை சேர்ந்த பயனாளி திருமதி பாப்பா பழனிசாமி (வயது 46) தெரிவித்ததாவது:
நானும், எனது கணவரும் ஏரி வேலைக்குத் தான் போயிட்டிருந்தோம். எங்களுக்கு 2 குழந்தைகள். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு புரட்சித்தலைவி அம்மா 4 விலையில்லா ஆடுகளை கொடுத்தார்கள். இதுவரை 6 குட்டிகள் ஈன்றுள்ளது. ஆடு வழங்கிய நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் ஆடு நல்லா ஆரோக்கியமாக உள்ளது. டாக்டர் வந்து பார்த்துட்டு மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்துட்டு போறாங்க. அம்மா குடுத்த ஆட்டுக்கு இதுவரைக்கும் எந்த செலவும் செய்யலை. நாளைக்கு எனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா கை கொடுக்கிறது இந்த ஆடாகத்தான் இருக்கும். எந்த வசதியும் இல்லாம இருந்த எனக்கு இந்த ஆடுகளை தந்து மறுவாழ்வு கொடுத்து, சமுதாயத்தில் எங்களை வாழ வழிகாட்டிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் குடும்பமே நன்றி உள்ளவர்களாக இருப்போம் எனத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம் சி.மாசிநாயக்கன்பட்டியில் வசிக்கும் குப்புசாமி மனைவி திருமதி பார்வதியம்மாள் (வயது 63) தெரிவித்ததாவது:
நானும் எனது வீட்டுக்காரரும் கூலி வேலை செய்து வந்தோம். எங்க குழந்தைங்க எல்லாம் கல்யாணம் பண்ணி அவங்க அவங்க தனித்தனியா வாழ்றாங்க. எங்களுக்கு யாருடைய ஒத்துழைப்பும், உதவியும் கிடையாது புரட்சித்தலைவி அம்மா அறிவித்த விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆடு கொடுத்தார்கள். அதனை நல்ல முறையில் பராமரித்து வளர்த்தோம். இதுவரை அந்த ஆடுகள் 16 குட்டிகள் ஈன்றுள்ளது. சமுதாயத்தில் யாருடைய ஒத்துழைப்பும் இன்றி இருந்த எங்களுக்கு விலையில்லா ஆடு வழங்கி நல்ல நிலையில் வாழ வழிவகுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நானும் எனது கணவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment