சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவர், சுயேட்சை பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இன்று (4.2.2016 – வியாழக் கிழமை), சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. CT. சுரேஷ், கானாடுகாத்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. த. சிதம்பரம் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. PR. செந்தில்நாதன், M.P., அவர்களும் உடன் இருந்தார்.
கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் மணப்பாக்கம் திரு. M.N. மனோகரன் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஜனசேவா கேந்திரம் என்ற அமைப்பின் நிறுவனரும், 50 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு. J. சதீஷ்குமார்; இடுக்கி மாவட்டம், சாந்தபாரா அல்மராய் குழுமத்தின் தலைவர் திரு. C. அப்துல்காதர் ஆகியோரும்; தமிழ் நாடு காங்கிரஸ் சேவா தளத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K. செல்வராஜ் அவர்களும், நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளின் போது, கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான திரு. S.P. வேலுமணி அவர்களும் உடன் இருந்தார்.
கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் M.A.S. சுப்ரமணியன், புதுச்சேரி N.R. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. நடராசன், ரெட்டியார்பாளையம் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. M. சிவசங்கர், புதுச்சேரி வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. S. பாலு (எ) பாலசுப்பிரமணியம், புதுச்சேரி வணிகர் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர் திரு. P. தங்கமணி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் திரு. பெ. புருஷோத்தமன், எம்.எல்.ஏ., அவர்களும் உடன் இருந்தார்.
தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
#AIADMK
No comments:
Post a Comment